×

தலைமையிடம்தானே முறையிட முடியும் கட்சிக்காக உழைத்தவர்கள் பதவி கேட்பது நியாயம்தான்: அமைச்சர் உதயகுமார் அதிரடி

மதுரை: கட்சிக்காக உழைத்தவர்கள் பதவி கேட்பது நியாயம்தான் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். மதுரையில் நேற்று அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் ஒரு மணி நேர மழைக்கே தள்ளாடுகிறது என நடிகர் கமல் தெரிவித்துள்ளார். வல்லரசு நாடுகள் கூட வெள்ளத்தில் தவித்து வருகிறது. காணொலி முலம் அறிக்கை வெளியிடுவதை விட, களத்தில் வந்து அவர் பார்க்கவேண்டும். அரசை குறை கூற வேண்டும் என்பதற்காக பேசி வருகிறார். தற்போதைய ஆட்சியில் நீர்நிலைகள் மிகச்சிறப்பாக தூர்வாரப்பட்டு உள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரிடம் இருந்து நல்ல பதில் வரும் என காத்திருக்கிறோம்.

டிஜிபி விவகாரத்தில் நிர்வாக வசதிக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை விமர்சனம் செய்யக்கூடாது. கட்சிக்காக உழைத்தவர்கள் பதவி கேட்பது நியாயம்தான். அவர்கள் தலைமையிடம் தானே முறையிட முடியும். கொடுக்கிற இடத்தில் இருக்கக் கூடிய தலைமை அதை கருணையோடு பரிசீலிப்பார்கள். ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக எஃகு கோட்டையாக உள்ளது, கட்சியில் கருத்து வேறுபாடு இல்லை. கருத்து பரிமாற்றம் தான் நடந்து வருகிறது. நடிகர் விஜய் தனது நிர்வாகிகளை சந்திப்பதில், அதைத்தாண்டி யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Tags : party ,Minister , It is fair for those who have worked for a party that can only appeal to the leadership to seek office: Minister Udayakumar Action
× RELATED பொதுத்தேர்தலில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான் கட்சி வெற்றி