×

திருமாவளவனை கைது செய்யாவிட்டால் போராட்டம் திருவில்லி. ஜீயர் பேட்டி

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் நேற்று  அளித்த பேட்டி: பெண்களைப் பற்றி இழிவாக மனு சாஸ்திரத்தில் கூறியிருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். அந்த மாதிரி எவ்வித கருத்தும் மனு சாஸ்திரத்தில் இல்லை. ஆகையால் பெண்களை பற்றி தவறாக பேசிய திருமாவளவனுக்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். தமிழக அரசு திருமாவளவனை கைது செய்யா விட்டால் துறவிகள், பெண்களை திரட்டி ரோட்டில் இறங்கி போராடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Thirumavalavan ,struggle ,interview ,Zeyer , If Thirumavalavan is not arrested, the struggle will not be successful. Zeyer interview
× RELATED பட்டியல் வகுப்பினருக்கு துணைவேந்தர்...