×

கொரோனாவில் இருந்து பாலகிருஷ்ணன் குணம்

சென்னை: மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் டிவிட்டர் பதிவு: கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 12ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான் 26ம் தேதி  குணமடைந்து இல்லம் திரும்பிவிட்டேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் சிறந்த முறையில் சிகிச்சையளித்த டீன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவத் துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் நேரிலும் தொலைபேசி மூலமாகவும் நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தோழமை கட்சி தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Balakrishnan ,character ,Corona , Balakrishnan character from Corona
× RELATED நிவர் புயலை எதிர்கொள்ள உரிய தயாரிப்பு...