×

வழிப்பறி சகோதரர்கள் கைது

ஆவடி: திருநின்றவூர், மண்டபம் தெருவை சேர்ந்தவர் ஜீவரத்தினம்(22). கடந்த மாதம் 29ந்தேதி பட்டாபிராம் இந்து கல்லூரி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து கையில் வைத்திருந்த செல்போனை பறித்து தப்பினர். இதுகுறித்து புகாரின்பேரில் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக, பாலவேடு நாசிக் நகர் பவானி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாரதி(24) மற்றும் அவரது தம்பி மணிகண்டன்(22) ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தல் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்து 5 சவரன் தங்கச்சங்கிலி, 3 செல்போன்கள் மற்றும் ஒரு பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Tags : Sewer brothers , Sewer brothers arrested
× RELATED சென்னை மாங்காட்டில் 35க்கும் மேற்பட்ட...