×

தமிழகத்தில் இன்று 2,708 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: சென்னையில் 747 பேர் பாதிப்பு- இன்று ஒரே நாளில் மட்டும் 72,236 கொரோனா பரிசோதனை

சென்னை: தமிழகத்தில் இன்று 2,708  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 7,11,713 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பல்வேறு தளர்வுகளுடன் செப்டம்பர் மாதம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,71,489 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 4,014 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் 29,268 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 14 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 18 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 10,956 ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 747 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை 1,96,378 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,83,923 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 8,856 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று 7 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த உயிரிழப்பு 3,599 ஆக உள்ளது.

* தமிழகத்தில் மொத்தம் 200 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 66 அரசு மருத்துவமனைகளிலும், 134 தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை நடத்தப்படுகிறது.

* தமிழகத்தில் இதுவரை 95,89,743 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 72,236 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் இதுவரை ஆண்கள் 4,29,594 பேரும், பெண்கள் 2,82,087 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 32 பேரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

* தமிழகத்தில் 12 வயதிற்குள் 25372 பேரும், 13 வயதிலிருந்து 60 வயதிற்குள் 5,98,762 பேரும், 60 வயதிற்கு மேல் 87,579 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.Tags : Corona ,Tamil Nadu ,Chennai ,corona tests , Corona infection confirmed in 2,708 people in Tamil Nadu today: 747 infected in Chennai - 72,236 corona tests in one day today
× RELATED 9 பேருக்கு கொரோனா தொற்று