எரிசக்தி துறையில் உலகின் மூன்றாவது சந்தையாக உள்ளது இந்தியா: எரிசக்தி கூட்டமைப்பு 4 வது கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

டெல்லி: எரிசக்தி துறையில் இந்தியாவின் எதிகாலம் சிறப்பாக உள்ளது என்று மோடி உரையாற்றி வருகிறார். இந்தியா எரிசக்தி கூட்டமைப்பு 4 வது கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலியில் உரையாற்றி வருகிறார். இந்தியாவில் இயற்கை எரிப்பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று அவர் கூறினார். எரிசக்தி துறையில் உலகின் மூன்றாவது சந்தையாக உள்ளது இந்தியா என்று மோடி தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் எரிசக்தி துறை பெரும் சரிவை கண்டுள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார்.

இந்தியாவின் எரிபொருள் தேவை வருங்காலங்களில் இரட்டிப்பாகும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். எல்இடி விளக்குகளின் பயன்பாட்டால் இந்தியா ரூ.24 ஆயிரம் கோடி வரை சேமித்துள்ளது என்று அவர் அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் விலை பாகுபாடின்றி எரிவாயு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Related Stories: