சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.37,704க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 குறைந்து ரூ.4,713க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசு குறைந்து ரூ.66.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொருளாதார சரிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக பொது முடக்க காலத்தில் தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது. இதற்கு முக்கிய காரணம், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது தான். ஊரடங்கு காலத்தில் பொருளாதாரம் முற்றிலுமாக முடங்கிக் கிடந்ததால் வெளிநாடுகளில் மக்கள் தங்கக் காசுகளில் முதலீடு செய்யத் தொடங்கினர்.