×

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16.45 லட்சத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,45,020-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 112 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 43,264-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 14,60,755 பேர் குணமடைந்து வீடு திரும்பியநிலையில் தற்போது மருத்துவமனைகளில் 1,40,486 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Maharashtra , In Maharashtra, 6,059 people were diagnosed with coronavirus in a single day today
× RELATED டெல்லி உட்பட 4 மாநிலத்தை சேர்ந்தவர்கள்...