×

மாணவர் இடஒதுக்கீட்டு சதவிகிதத்தை குறைத்தது பச்சை துரோகம்: உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

சென்னை: அரசுப்பள்ளி மாணவர் நீட்டில் வென்றால் 10% இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதே முன்னாள் நீதிபதி கலையரசன் குழுவின் பரிந்துரை; தமிழக அரசு அதனை 7.5%ஆக குறைத்தனர் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; கமிஷன் சதவிகிதத்தை உயர்த்தி கேட்டு கொள்ளையடிக்கும் எடுபிடிகள் - மாணவர் இடஒதுக்கீட்டு சதவிகிதத்தை குறைத்தது பச்சை துரோகம். நம் பிள்ளைகள் டாக்டர் ஆகக் கூடாது எனும் சதியின் பிரதிநிதியாகவே ஆளுநர் உள்ளார். யாராருடைய  கால்-கையையோ பிடித்து லீஸுக்கு எடுக்கப்பட்ட அரசு; கலைந்திடுமோ? என்ற பயத்தில் ஆளுநரை வற்புறுத்த முடியாது என்று கையாலாகாத அடிமைகள் நழுவுகின்றனர்.

மாநில வாரியான நீட் தரவரிசை பட்டியல் வெளியாகவில்லை. ஆளுநரின் வஞ்சக தாமதத்தால் கவுன்சிலிங் தேதி தெரியவில்லை. அரும்பாடுபட்டு நீட்டில் வென்ற மாணவர் மன உளைச்சலில் தத்தளிக்கின்றனர். கொள்ளைவெறியில் ருசிகண்ட அடிமைகள் ஆட்சியை தக்கவைக்க மாணவர் வாழ்வை பலியிடுவதை அனுமதிக்க முடியாது. மாநில வாரியான நீட் தரவரிசை பட்டியல் வெளியாகவில்லை. ஆளுநரின் வஞ்சக தாமதத்தால் கவுன்சிலிங் தேதி தெரியவில்லை. அரும்பாடுபட்டு நீட்டில் வென்ற மாணவர் மன உளைச்சலில் தத்தளிக்கின்றனர். கொள்ளைவெறியில் ருசிகண்ட அடிமைகள் ஆட்சியை தக்கவைக்க மாணவர் வாழ்வை பலியிடுவதை அனுமதிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Reducing Student Reservation Percentage Green Betrayal: Udayanidhi Stalin Tweet
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...