ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்-க்கு கொரோனா: தொற்று உறுதியானதை அடுத்து தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டதாக டிவிட்டரில் தகவல்

டெல்லி: ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ்-சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதை தொடர்ந்து வீட்டில் தனிமைபடுத்தி கொண்டதாகவும், வீட்டில் இருந்து பணிகளை மேற்கொள்வதாகவும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் இதுவரை 78,64,811 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து  70,78,123 பேர் மீண்ட நிலையில் 1,18,534 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் தற்போது நாடு முழுவதும் 6,68,154 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா, பொதுமக்களை மட்டுமல்லாது, முக்கிய பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை.

அந்த வகையில், மத்திய அமைச்சர்கள் , எம்.பி.க்கள், தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் நலத்துடன் உள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். என்னை தனிமைப்படுத்திக் கொண்டாலும் வீட்டிலிருந்தே பணிகளை தொடர்வேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: