கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1.18 லட்சத்தை தாண்டியது: மீண்டோர் விகிதம் 90.00% ஆக அதிகரிப்பு : மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.18 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 78 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 50,129 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 78,64,811 ஆக உயர்ந்தது.

* புதிதாக 578 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,18,534.ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 62,077 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 70,78,123 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  6,68,154 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 90.00% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.51% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 8.50% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 11,40,905 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

* இதுவரை 10.25 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

*கொரோனா பாதித்தோர் அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், ஆந்திரா 2-வது இடத்திலும், கர்நாடகா 3-வது இடத்திலும், தமிழ்நாடு 4-வது இடத்திலும் இருந்து வருகிறது.

Related Stories: