உலகம் முழுவதும் 4.29 கோடியைத் தாண்டிய கொரோனா பாதிப்பு... வைரஸ் தாக்குதலால் 77,202 பேர் கவலைக்கிடம்

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.29 கோடியைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 42,917,045 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 3.16 கோடியைக் கடந்தது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 77 ஆயிரத்து 202-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11.54 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 8,827,932

இந்தியா - 7,863,892

பிரேசில் - 5,381,224

ரஷியா - 1,497,167

ஸ்பெயின் - 1,110,372

அர்ஜெண்டினா - 1,081,336

கொலம்பியா - 1,007,711

பெரு - 886,214    

மெக்சிகோ - 886,800

பிரான்ஸ் - 1,086,497

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 230,068

பிரேசில் - 156,926

இந்தியா - 118,567

மெக்சிகோ - 88,743

இத்தாலி - 37,210    

பெரு - 34,095

ஸ்பெயின் - 34,752

பிரான்ஸ் - 34,645

ஈரான் - 32,320

கொலம்பியா - 30,000

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

இந்தியா - 7,075,723

அமெரிக்கா - 5,741,611

பிரேசில் - 4,817,898

ரஷியா - 1,130,818

கொலம்பியா - 907,379

பெரு - 803,846

அர்ஜெண்டினா - 881,113

Related Stories: