×

சொல்லிட்டாங்க...

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி உதயமான உடனே, நீட் தேர்வை சட்டப்படி ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபடுவோம். அதில் முழுமையாக வெற்றி  பெறுவோம். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

பாஜவின் கைப்பாவையாக அதிமுக அரசு செயல்படுகிறது என்பதற்கு திருமாவளவன் மீது தொடுக்கப்பட்டிருக்கிற வழக்கே உரிய சான்றாகும். - தமிழக  காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

இந்தி பேசாத மக்களை இரண்டாந்தர குடிமக்களாக ஆக்கும் முயற்சிகளை பாஜ அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். - மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ

தமிழக காவல்துறை அரசமைப்பு சட்டத்தின்படி நடப்பதற்கு பதிலாக, சமீபகாலமாக சங் பரிவாரின் ஆட்டுவிப்புக்கு இணைந்து போகிற நடவடிக்கையில்  ஈடுபடுகிறது. - மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன்

Tags : As soon as the DMK comes to power in Tamil Nadu, we will try to abolish NEET by law. We will succeed in it completely. - DMK leader MK Stalin
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்