×

முதல்வரின் பாதுகாப்பு: போலீஸ் வேன் மோதி பெண் பலி

ஆத்தூர்:  கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டுவனஞ்சூரை சேர்ந்தவர் பூபதிராஜா (42). இவர் மனைவி பிரியா (30), தாய் செளந்தரம் (65) ஆகியோருடன்  ராசிபுரத்தில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு காரில் 18ம் தேதி ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். சேலம் மாவட்டம் ஆத்தூர்  அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது, சேலத்தில் இருந்து சென்னை சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்காக அங்கு பாதுகாப்புக்கு நின்ற  போலீசார், பூபதிராஜாவின் காரை சர்வீஸ் சாலைக்கு திருப்பினர். இதனால் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். அப்போது பின்னால் வந்த பாதுகாப்பு  படையினரின் வேன், கார் மீது மோதியது.  இதில் படுகாயமடைந்த பிரியா, செளந்தரம் ஆகியோரை சேலம் தனியார் மருத்துவமனையில் ேசர்த்தனர்.  அங்கு சௌந்தரம் நேற்று உயிரிழந்தார்.


Tags : Chief's Security: Woman killed in police van collision
× RELATED உள்ளாட்சி அமைப்புகளில் டெண்டர்...