×

தமிழகத்தில் பல மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது: சென்னையில் 779 பேர் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் பல மாதங்களுக்கு பிறகு நேற்று 2,886 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழக சுகாராத்துறை வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று 78,896 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 2,886 பேருக்கு தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. அதில்  சென்னையில் 779 பேர், செங்கல்பட்டு 169, கோவை 287, காஞ்சிபுரம் 140, சேலம் 148, திருவள்ளூர் 165,  திருப்பூர் 101 என  மாநிலம் முழுவதும் 2,886 பேருக்கு நேற்று தொற்று உறுதி ெசய்யப்பட்டுள்ளது.

இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 6 ஆயிரத்து 136 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4 லட்சத்து 26 ஆயிரத்து  240 ஆண்கள், 2 லட்சத்து 79 ஆயிரத்து 864பேர் பெண்கள், 32 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 4,024 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை  6 லட்சத்து 63 ஆயிரத்து 456 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். 31 ஆயிரத்து 787 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 35 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,893 ஆக  உயர்ந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai , After several months in Tamil Nadu, the corona infection has dropped to less than 3,000: 779 people in Chennai
× RELATED தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி