×

அண்ணா பதக்கம்’ பெற விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம்’ ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால்,  குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். வீர,  தீர செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவர். பொதுமக்களில் மூவருக்கும், அரசு  ஊழியர்களில் மூவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை.

2021ம் ஆண்டு வழங்கப்படவுள்ள பதக்கத்திற்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் வீர, தீர செயல்கள் மற்றும் அவை  தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணைய தளம்  மூலமாகவோ அரசு முதன்மை செயலாளர், பொதுத்துறை, தலைமை செயலகம், சென்னை என்ற முகவரிக்கு 14.12.2020க்கு முன்பாக அனுப்பி  வைக்கப்பட வேண்டும்.

Tags : Anna Medal , You can apply for the Anna Medal
× RELATED சிறந்த சேவைக்காக மஞ்சூர் ஜீப்...