அமெரிக்க கடற்படையின் விமான விபத்தில் 2 பேர் பலி

வாஷிங்டன், :அமெரிக்க கடற்படை விமான விபத்தில் சிக்கிய 2 விமான பணியாளர்கள் இன்று பலியாகினர். மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான விமானம் அந்நாட்டின் அலபாமாவில் இன்று அதிகாலை 5 மணியளவில் (இந்திய நேரப்படி) விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில், விமானத்தில் இரண்டு விமானிகள் இறந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விபத்து குடியிருப்பு பகுதிக்கு அருகில் நடந்தது.

இருப்பினும், இதுவரை பொதுமக்கள் பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியாக வில்லை. விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இதுகுறித்து அமெரிக்க கடற்படை தனது  அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ‘அமெரிக்க கடற்படையின் டி-6 பி டெக்சன்-2 என்ற விமானம் அலபாமாவின் போலேவில் மாலை 5 மணியளவில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த விமானிகள், பயிற்சியாளர்களில் 2 பேர் விபத்தில் இறந்துள்ளனர். இறந்த விமானிகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவத்தில் ெபாதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். அமெரிக்க கடற்படை உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: