×

தமிழகத்தில் மேலும் 2,886 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 7,06,136 லட்சமாக உயர்வு; இதுவரை 6,63,456 லட்சம் பேர் குணம்.!!!

சென்னை: தமிழகத்தில் மேலும் 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,06,136-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு  அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  

* தமிழகத்தில் மேலும் 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,06,136 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,63,456 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 4,024 பேர் குணமடைந்துள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 10,893 ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 779 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,94,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 94,36,817 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 80,237 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 198 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 31,787 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,26,240 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 1,711 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,79,864 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 1,175 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 32 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை.

* வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,711 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Corona ,Tamil Nadu , Corona to 2,886 more in Tamil Nadu: Total impact rises to 7,06,136 lakhs; So far 6,63,456 lakh people have been cured !!!
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...