இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் தோட்டக்கலை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கீரை, கொத்தமல்லி பயிருக்கு  ஹெக்டேருக்கு 2500,  மற்றும் தக்காளி, கத்திரி, வெண்டை, அவரை, கொடிவகை பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 3750 வரை ஊக்கத் தொகை வழங்கப்படும். அதிகபட்சமாக ஒரு விவசாயி 2 ஹெக்டேர் வரை ஊக்கத் தொகை பெறலாம். தனி விவசாயியாக இருப்பினும், குழு உறுப்பினராக இருப்பினும், அங்கக சான்று பெற 500 வழங்கப்படும். இதற்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு இத்திட்டத்தில் பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

Related Stories: