×

விடுதி வாடகை பாக்கி எதிரொலி நடிகை விஜயலட்சுமி மீது போலீசில் புகார்

சென்னை: சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் சமீர் என்பவருக்கு சொந்தமான கிரஷன்ட் இன் என்னும் சொகுசு விடுதியில் நடிகை விஜயலட்சுமி தனது தாயாருடன் தங்கி உள்ளார். இந்நிலையில், நேற்று இரவு திருவான்மியூர் காவல் நிலையத்தில் விடுதியின் உரிமையாளர் சமீர் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், நடிகை விஜயலட்சுமி கடந்த பிப்ரவரி மாதம் முதல் எனது விடுதியில் தங்கி உள்ளார். அன்றிலிருந்து இன்று வரை விடுதியில் தங்கி இருந்ததற்கான வாடகை ரூ.5 லட்சத்தை தராமல் இருந்தார். பின்னர், பல முறை தன்னை அலைகழித்து நடிகை விஜயலட்சுமி ரூ.2 லட்சம் மட்டும் கொடுத்தார். மீதி வாடகை தராமலும் விடுதியைக் காலி செய்யவும் மறுக்கிறார்.
எனவே, அவரிடம் இருந்து வாடகை பாக்கி ரூ.3 லட்சத்தைப் பெற்று தர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


Tags : Vijayalakshmi , Actress Vijayalakshmi complains to police about hotel rent arrears
× RELATED வாடகை தரவில்லை என நடிகை விஜயலட்சுமி மீது போலீசில் புகார்