69 கிலோ கேக் வெட்டி கே.எஸ்.அழகிரி பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் பிறந்த நாளை நேற்று சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் 69 கிலோ கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் 69வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியினர் சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செயல் தலைவர் ஜெயக்குமார் எம்பி தலைமையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, 69 கிலோ எடை கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. மேலும் 69 ஏழை, எளிய மக்களுக்கு தையல் மிஷின், மிக்சி, 3 சக்கர வாகனங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை காங்கிரசார் வழங்கினர்.

நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ உ.பலராமன், கோபண்ணா, வக்கீல் செல்வம், பொன்.கிருஷ்ணமூர்த்தி, சிரஞ்சீவி, கீழானூர் ராஜேந்திரன், நாஞ்சில் பிரசாத், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், வீரபாண்டியன், ரூபி மனோகரன், இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், வடசென்னை மாவட்ட பொருளாளர் ஷிப்பிங் ஜெ.டில்லி பாபு, ஓபிசி பிரிவு தலைவர் நவீன், மகிளா காங்கிரஸ் தலைவி சுதா, முன்னாள் தலைவி ஜான்சி ராணி, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் துணை தலைவர் காண்டீபன், ஓபிசி பிரிவு செயலாளர் கே.கோபி, பாலசந்தர், ராயபுரம் டி.குமார், ஏ.பி.குமரன், திருவள்ளூர் மத்திய மாவட்ட துணை தலைவர் துரை சந்திரசேகர், அருண் பிரசாத், ராகுல் காந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை எம்.பி.ரஞ்சன் குமார் செய்திருந்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: