×

ஆகம விதிப்படி மகிஷாசுர சம்ஹாரம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம்

உடன்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் ஆகமவிதிப்படி மகிஷாசுர சம்ஹாரம் நடைபெறும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டமாகத் தெரிவித்தார். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில்  தரிசனத்துக்கு பின் அவர் அளித்த பேட்டி: “தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசுர சம்ஹாரம் வரும் 26ம் தேதி (திங்கட்கிழமை) இரவு ஆகம விதிப்படி நடைபெறும். இதில் கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்பர். இருப்பினும் வெளி மாவட்டங்களையும், வெளி மாநிலங்களையும் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அவரவர் ஊர்களிலேயே விரதத்தை நிறைவு செய்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Minister ,Agam , Mahishasura Samharam as per Agam rule: Minister Kadampur Raju Plan
× RELATED புதுவை ஜிப்மர் மருத்துவமனை லிப்டில் சிக்கி முதல்வர், அமைச்சர் தவிப்பு