இலவச கொரோனா மருந்து 19 லட்சம் வேலை வாய்ப்பு: பீகாரில் பாஜ வாக்குறுதி

பாட்னா: பீகார் மாநிலத்தில் வருகிற 28ம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் ஒரே கூட்டணியில் இருந்த போதிலும், தனித்தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. அதன் முக்கிய அம்சமாக, 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவதாக இரு கட்சிகளுமே வாக்குறுதி அளித்துள்ளன. இந்நிலையில், பாஜ.வின் தேர்தல் அறிக்கையை பாட்னாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். இந்த அறிக்கைக்கு பஞ்ச சூத்திரம், ஒரு லட்சியம், 11 சங்கல்பம் என பெயரிடப்பட்டு உள்ளது.

இதில், பஞ்ச சூத்திரம் என்பது கிராமங்கள், நகரங்கள் தொழிற்சாலைகள், கல்வி மற்றும் விவசாயத்தை மேம்படுத்துவதாகும். அதேபோல் 11 சங்கல்பத்தில், மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது மற்றும் பீகாரை தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்றுவது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

* மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பு மருந்து அளிக்கப்படும்.

* 19 லட்சம் வேலைவாய்ப்புகள் தரப்படும்.

* பீகார் மாநிலம் ஐடி மையமாக மாற்றப்படும்

* 9ம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச டேப் தரப்படும்.

* விளையாட்டு பல்கலைக் கழகம் உருவாக்கப்படும்.

*  ஊரக பகுதிகளில் 30 லட்சம் பேருக்கு வீடு கட்டி தரப்படும்.

Related Stories: