×

ஒகேனக்கல்லில் 7 மாதத்துக்கு பின் சுற்றுலா பயணிகள் அனுமதி: பரிசலில் 3 பேர் மட்டும் பயணிக்கலாம்

தர்மபுரி: ஒகேனக்கல்லில்  7 மாதத்திற்கு பிறகு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கலெக்டர் மலர்விழி நேற்று  அளித்த பேட்டி: ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகளை பார்வையிட கோத்திக்கல்பாறை வரை பரிசலில் சென்று வர, அனுமதி வழங்கப்படுகிறது. அருவிகளில் குளிப்பதற்கும், விடுதியில் தங்கவும்,  சமூக இடைவெளியை பின்பற்றி மசாஜ் செய்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்படுகிறது. அனைத்து சுற்றுலா பயணிகளும், சோதனைச்சாவடியில் கொரோனா அறிகுறிகள் உள்ளதா என்பதை மருத்துவ குழுவினர் மூலம் பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவர்.  

ஒரு பரிசலுக்கு பரிசல் ஓட்டியுடன் 3 பேர் மட்டும் செல்ல அனுமதிக்கப்படும். மேலும் ஐந்தருவி, பொம்மசிக்கல், மாமரத்து கடவுபகுதியில் பரிசல் பயணம் செய்வதற்கும், தொங்கு பாலம் செல்வதற்கும் முதலை பண்ணை, பூங்கா செல்லவும் தடை நீடிக்கிறது என்றார்.


Tags : Okanagan Valley , Tourist admission after 7 months in Okanagan Valley: Only 3 people can travel on the gift
× RELATED 13 பேர் டிஸ்சார்ஜ்