வேலூரில் விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய முதன்மை பொறியாளர் மனைவி வங்கி லாக்கரில் 400 கிராம் தங்கம் பறிமுதல்

வேலூர்: வேலூரில் விஜிலென்ஸ்சில் சிக்கிய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி மனைவியின் வங்கி லாக்கரில் 400 கிராம் தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் மண்டல மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை முதன்மை பொறியாளர் பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான காட்பாடி, ராணிப்பேட்டையில் உள்ள வீடுகளில் விஜிலென்ஸ் போலீசார் நடத்திய சோதனையில் 3.25 ேகாடி ரொக்கம், 3.5 கிலோ தங்க நகை, 6.5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 90 சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு பாஸ் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, பன்னீர்செல்வத்தின் மனைவி புஷ்பாவின் பெயரில் உள்ள வங்கி கணக்கு மற்றும் லாக்கர் முடக்கப்பட்டது. இதன்பின், ராணிப்பேட்டையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் புஷ்பாவின் பெயரில் இருந்த வங்கி லாக்கரை விஜிலென்ஸ் போலீசார் நேற்று முன்தினம் திறந்தனர். அதில் மொத்தம் 400 கிராம் தங்க காசுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories: