பட்டாணி சூப்

எப்படிச் செய்வது?

குக்கரில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் பூண்டு, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கி பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்பு பச்சைப் பட்டாணியை வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேகவைக்கவும். ஆறியதும் பச்சைமிளகாய், பிரிஞ்சி இலையை எடுத்து விட்டு பட்டாணியை மிக்சியில் அரைக்கவும். இத்துடன் பால் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு உப்பு, மிளகுத்தூள் தூவி சூடாக பரிமாறவும்.