×

திருப்பதியில் நவராத்திரி 7ம் நாள் பிரமோற்சவம் சந்திர பிரபை வாகனத்தில் அருள்பாலித்த மலையப்பர்: இன்று காலை சர்வ பூபால வாகனம்

திருமலை: திருப்பதியில் 7ம் நாள் நவராத்திரி பிரமோற்சவத்தில் சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி மலையப்ப சுவாமி அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம் கடந்த 16ம் தேதி  தொடங்கியது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திருக்கல்யாண மண்டபத்திலேயே ஒவ்வொரு நாளும் தேவி பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வருகிறார். அதன்படி 7ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்தில் அருள்பாலித்தார். ‘சூரிய பகவானின் பிரதிரூபமும் நானே’ என்னும் விதமாக  தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.

நேற்றிரவு வெள்ளை நிற ஆடை, மாலை அணிந்து சந்திரபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்புரிந்தார். சூரியன் அக்னி வடிவம், சந்திரன் சாந்த வடிவம் என்பதால் இரண்டும் தனது அம்சமே என்னும் விதமாக சூரியபிரபை மற்றும் சந்திரபிரபை வாகனத்தில் சுவாமி அருள்பாலித்தார்.  பிரமோற்சவம் 8ம் நாளான இன்று காலை சர்வ பூபால வாகனத்திலும், இன்று இரவு குதிரை வாகனத்திலும் மலையப்ப சுவாமி அருள்பாலிக்கிறார். 9ம் நாளான நாளை சக்கரத்தாழ்வார்  தீர்த்தவாரியுடன் நவராத்திரி பிரமோற்சவம் நிறைவடைகிறது.

வந்தது 17,574 பக்தர்கள் கிடைத்தது 95 லட்சம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு 9 மணி வரை என மொத்தம் 17,574 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்கள் அனைவரும் 300 கட்டண தரிசன டிக்கெட் பெற்றவர்கள். 6,579 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். காலை முதல் இரவு வரை பக்தர்கள் உண்டியலில் 95.50 லட்சத்தை காணிக்கையாக செலுத்தினர்.

Tags : Tirupati ,Navratri ,Pramorsavam ,Chandraya Prabha , Navratri 7 th day of the lunar piramorcavam in Tirupati pirapai malaiyappar blesses the vehicle: the vehicle this morning all pupala
× RELATED ஆற்காடு அருகில் திரவுபதி அம்மன்...