×

விளையாட்டு துளிகள்

மீண்டும் நேருக்கு நேர்....சென்னை-மும்பை
ஐபிஎல் தொடரில் 41வது லீக் போட்டியில் இன்றிரவு  சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த 2 அணிகளும் இதுவரை 29முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் மும்பை 17முறையும்,  சென்னை 12 முறையும் வெற்றிப் பெற்றுள்ளன.  இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 10 ஆட்டங்களில் 2ஆட்டங்களில் மட்டுமே சென்னை வென்றது. மீதி 8 ஆட்டங்களை மும்பை கைப்பற்றியது. நடப்புத் தொடரில் செப்.19ம் தேதி நடந்த லீக் போட்டியில் சென்னை 5 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் மும்பையை வீழத்தியது. அந்த அசத்தல் வெற்றிக்கு பிறகு சென்னைக்கு தோல்வி முகம்தான். அந்த அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 3வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.  

இதுவரை முதல் இரண்டு இடங்களில் மாறிமாறி இருந்த மும்பை அணி  பெங்களூர்-கொல்கத்தா ஆட்டத்திற்கு பிறகு 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. மும்பை அணி  9 ஆட்டங்களில் விளையாடி   6 வெற்றி, 3 தோல்விகளை பெற்றுள்ளது. எந்த இடத்தில் இருந்தாலும் இந்த இரு அணிகளும், இனி பெறப்போகும் வெற்றிகள்தான் அவற்றின் பிளேஆப் வாய்ப்பை தக்க வைக் கும்.

கொல்கத்தா!
ஐபிஎல் தொடர்களில் ரன் எடுக்காமல் அதிக பந்துகளை வீணாக்கிய(டாட் பால்) சாதனை பட்டியலில் முதல் 3 இடங்களில் கொல்கத்தாதான் இருக்கிறது. அந்த அணி 2019சீசனில்  சென்னை அணிக்கு எதிராக 120 பந்துகளில் 75பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காதது தான் முதல் இடத்தில் உள்ளது. மேலும் 2வது இடத்தில் நேற்று முன்தினம் பெங்களூருக்கு எதிரான போட்டி உள்ளது. அந்த போட்டியில் 120பந்துகளில்  72பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் கோட்டை விட்டது கொல்கத்தா. சில நாட்களுக்கு  முன்பு  நடந்த  மும்பைக்கு எதிரான போட்டியில் 57பந்துகளை வீணாக்கியது கொல்கத்தா. அந்த போட்டிதான் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது அதுமட்டுமல்ல பெங்களூருக்கு எதிரான போட்டியின் மூலம் 3ரன்னில்3விக்கெட்களை இழந்த கசப்பான சாதனையையும் கொல்கத்தாவுக்கு சொந்தமாகி உள்ளது.

மெய்டன் ஓவர்
இந்த சீஸனில் மொத்தம் 12வீரர்கள் ரன் ஏதும் கொடுக்காத மெய்டன் ஓவர்களை வீசியுள்ளனர்.  சிராஜ் போலவே சென்னை வீரர் தீபக் சாஹர் 2 மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார். ஆனால் தீபக் 2 வெவ்வேறு போட்டிகளில் தலா ஒரு மெய்டன் வீசினார். அவரை தவிர  வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ், நவதீப் சைனி(பெங்களூர்), டி.நடராஜன், ரஷித்கான்(ஐதராபாத்), ஷெல்டன் கார்டல், அர்ஷதீப் சிங்(பஞ்சாப்),  ஷிவம் மாவி(கொல்கத்தா), காகிசோ ரபாடா(டெல்லி), டிரென்ட் போல்ட்(மும்பை) ஆகியோரும் தலா ஒரு மெய்டன் ஓவர் வீசியுள்ளனர்.

Tags : Chennai-Mumbai Tonight is the 41st league match in the IPL series
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...