நெல்லையில் தசரா பண்டிகைக்காக அம்மன் வேடம் கட்டிய பக்தர்கள்

நெல்லை: தசரா விழாவையொட்டி ெநல்லை குறுக்குத்துறை படித்துறை இசக்கியம்மன் கோயில், முத்தாரம்மன் கோயில் தசரா குழுவினர் ஆண்டு தோறும் விரதம் இருந்து அம்மன் வேடம் அணிந்து கோயிலுக்கு செல்வது வழக்கம். இதுபோல் இந்த ஆண்டும் தசரா விழாவையொட்டி கடந்த 16ம் தேதி காளி பூஜை, மயானபூஜையுடன் பக்தர்கள் விரதம் துவக்கினர். 18ம் தேதி குலசையில் இருந்து கண்சட்டி தீர்த்தம் எடுத்து வருதலும், அதன்பின் பக்தர்கள் காப்பு கட்டுதலும் நடந்தது.

வரும் 24ம் தேதி முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும், மதியம் அன்னதானம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து நேர்த்தி கடனுக்காக காளி அம்மன், சுவாமி உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து பக்தர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்றுவந்தனர்.

Related Stories: