நள்ளிரவு நேரத்தில் தெருக்களில் உலா வரும் காட்டு யானைகள்: துடியலூரில் பொதுமக்கள் பீதி

பெ.நா.பாளையம்: கோவை துடியலூரில் நள்ளிரவு நேரத்தில் தெருக்களில் உலா வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கோவை மாவட்ட எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வசிக்கின்றன. அவைகளில் சில உணவு தேடி அவ்வப்போது மலை அடிவாரப்பகுதிகளில் வெட்டப்பட்டுள்ள அகழிகளைத் தாண்டி விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புக்குள் வந்து விடுகின்றது. இதேபோல் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வனத்தை விட்டு வெளியேறிய 3 யானைகள் துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, கதிர்நாயக்கன்பாளையம் ஸ்ரீலட்சுமி நகர் பேஸ் 3 பகுதிக்குள் நுழைந்தன.

உணவு, தண்ணீர் தேடி குடியிருப்புக்குள் நுழைந்த யானைகள் தெருக்களில் உலா வரும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடி கேமராவில் பதிவானது. நள்ளிரவில் மிகவும் சர்வ சாதாரணமாக 3 காட்டு யானைகள் தெருக்கள் வழியே நடந்து செல்லும் காட்சிகள், அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

Related Stories: