×

கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்தவுடன், தமிழக அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும்: புதுக்கோட்டையில் முதலமைச்சர் அறிவிப்பு

புதுக்கோட்டை: தமிழக அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என புதுக்கோட்டையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்த பின் முதல்வர் பழனிசாமி கூறினார்.  அதிக காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன என தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐடிசி நிறுவன ஆலை தொடங்கப்பட்டு 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. 272 ஏரிகள் குடிமராமத்துப் பணிகள் மூலம் தூர்வாரப்பட்டுள்ளன. ரூ. 31 கோடியில் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதுக்கோட்டையில் 197 கோடி ரூபாய் செலவில் தொழில் தொடங்க முதலீடு செய்துள்ளன.  211 தொழில் நிறுவனங்கள் சுமார் 300 கோடி செலவில் தொழில் தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என தெரிவித்தார். புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ஐடிசி தொழிற்சாலை புதுக்கோட்டையில் செயல்பட்டு வருகிறது என கூறினார்.

மேலும் சுமார் 6 ஆயிரம் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என கூறினார்.  813 விவசாயிகளுக்கு  வேளாண் உபகரணங்களுக்கு சுமார் 8 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி குடியிருப்பு கட்டும் திட்டத்தின் கீழ் 2016 முதல் 9 ஆயிரம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கூட்டு குடிநீர் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடக்கிறது என கூறினார். 2020-21 ஆம் நிதியாண்டில் சுமார் 500 கோடி கடன் வழங்க இலக்கு உள்ளதாக தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும். ரூ. 700 கோடி மதிப்பிலான காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ஜனவரியில் அடிக்கல் நாட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,announcement ,government ,Pudukottai ,Tamil Nadu , Corona Vaccine, Government of Tamil Nadu, Vaccine, Chief Minister
× RELATED வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க...