கேழ்வரகு புட்டு

எப்படிச் செய்வது?

கேழ்வரகு மாவில் உப்பு, தண்ணீர் தெளித்து பிசறிக் கொள்ளவும். புட்டுக் குழாயில் முதலில் கேழ்வரகு மாவு அதன் மேல் தேங்காய்த்துருவல் மீண்டும் கேழ்வரகு மாவு, தேங்காய்த்துருவல் என மாறி மாறி போட்டு வேக விடவும். நன்றாக வெந்ததும் வெல்லப்பொடி சேர்த்து கிளறி பரிமாறவும்.