×

தினமும் 500 கோடி இமோஜிகள்!

நன்றி குங்குமம்

காதல், கோபம், அழுகை, மகிழ்ச்சி, விருப்பம்... என அத்தனை உணர்வுகளையும் வெளிப்படுத்தும் உலகின் பொதுமொழியாகிவிட்டது இமோஜி. டுவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் அரங்கேறும் விர்ச்சுவல் கம்யூனிகேஷனில் இமோஜிக்குத்தான் முதல் இடம். தாய்மொழிக்குக் கூட அடுத்த இடம்தான்!தினமும் ஃபேஸ்புக் மெசஞ்சரில் மட்டும் 500 கோடி தடவைக்கும் மேல் இமோஜிகள் பயன்படுத்தப்படுகின்றன. தவிர, கடந்த சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கில் புதுப்புது இமோஜிகள் வந்து இளசுகளைக் குஷிப்படுத்துகின்றன.

ஆம்; 1995ல் வெறும் 76 இமோஜிகள் மட்டுமே இருந்தன. 2020ல் இமோஜிகளின் எண்ணிக்கை 3,136. 2021ல் 3,353 ஆக இதன் எண்ணிக்கை எகிறப்போகிறது. இவ்வளவு இமோஜிகள் கொட்டிக் கிடந்தாலும் அழுகையும் சிரிப்பும் கலந்த இமோஜிதான் டுவிட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது. இன்ஸ்டாகிராமில் ஹார்ட்டின் இமோஜிதான் டாப்.

தொகுப்பு: த.சக்திவேல்

Tags : 500 crore emojis every day!
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...