ஒரே நாளில் 60,000 பேருக்கு புதிதாக தொற்று.. உலகளவில் கொரோனா பாதிப்பு 4.14 கோடி ஆக அதிகரிப்பு...3.09 கோடி பேர் நோயில் இருந்து மீட்பு

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 14 லட்சத்தை கடந்தது.சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 14 லட்சமாக அதிகரித்துள்ளது.தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 4 கோடியே 14 லட்சத்து 58 ஆயிரத்து 967 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 94 லட்சத்து 36 ஆயிரத்து 214 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 74 ஆயிரத்து 78 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 3 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது . ஆனாலும், கொரோனாவால் இதுவரை 11 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 85,81,753

இந்தியா - 76,51,108

பிரேசில் - 53,00,649

ரஷியா - 14,47,335

ஸ்பெயின் - 10,46,641

அர்ஜெண்டினா - 10,37,325

கொலம்பியா - 9,81,700

பிரான்ஸ் - 9,57,421

பெரு - 8,76,885

மெக்சிகோ - 8,60,714

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 2,27,350

பிரேசில் - 1,55,459

இந்தியா - 1,15,914

மெக்சிகோ - 86,893

இங்கிலாந்து - 44,158

இத்தாலி - 36,832

ஸ்பெயின் - 34,366

பிரான்ஸ் - 34,048

பெரு - 33,937

ஈரான் - 31,346

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

இந்தியா - 67,95,103

அமெரிக்கா - 55,86,285

பிரேசில் - 47,56,489

ரஷியா - 10,96,560

கொலம்பியா - 8,84,8895

அர்ஜெண்டினா - 8,40,520

பெரு - 7,92,892

தென் ஆப்ரிக்கா - 6,41,706

Related Stories: