×

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,40,436-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 47 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 6128-ஆக அதிகரித்துள்ளது. மேலும் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 3,10,191-பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 24,117- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Tags : Delhi , In Delhi, 3686 people have been diagnosed with corona infection in the last 24 hours
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...