குழிப்பணியாரம்

எப்படிச் செய்வது?

பணியாரம் சுடுவதற்கு சற்று முன்பு வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். புழுங்கல் அரிசி, பச்சை அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஊற வைத்து, அதிகம் தண்ணீர் விடாமல் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து, ஓர் இரவு அரை பகல் ஊற வைத்து அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளித்து, நறுக்கி வைத்துள்ள பொருட்களைச் சேர்த்து வதக்கி மாவுடன் சேர்க்கவும்.

பிறகு அடுப்பில் குழிப்பணியாரச் சட்டியை வைத்து, குழிகளில் லேசாக கடலெண்ணெய் தடவி முக்கால் குழி வரை மாவை ஊற்றி வேறொரு குழியான பாத்திரத்தால் மூடவும். இப்படிச் செய்வதால் நீராவியினால் கொஞ்சமும், கல்லின் சூட்டினால் கொஞ்சமும் பணியாரம் வேகும். ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறத்தை வேக வைக்கவும்.