×

மக்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், வைரஸ் என்பது முற்றிலுமாக அழிந்து விடவில்லை: 7வது முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை

டெல்லி: 7வது முறையாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றினார். கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடர்கிறது என கூறினார். நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது என கூறினார். திருவிழாக் காலங்களில் வியாபாரம் மெதுவாக சூடு பிடிக்கிறது என உரையாற்றினார். பல்வேறு தேவைகளுக்காக மக்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். மேலும் அதனை தவிர்க்க வேண்டும் என கூறினார். மக்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் வைரஸ் என்பது முற்றிலுமாக அழிந்து விடவில்லை எனவும், பண்டிகை காலத்தை முன்னிட்டு நாம் அனைவரும் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எடுத்துரைத்தார்.

அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது என தெரிவித்தார். அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என கூறினார். மேற்கத்திய நாடுகளை விட நாம் கொரோனா பாதித்தவர்களை அதிக அளவில் காப்பாற்றி உள்ளோம் என பேசினார். ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்டிருக்கலாம்- ஆனால் வைரஸ் இன்னமும் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் மறந்து விடக்கூடாது என கூறினார். பொதுமுடக்கம் முடிவுக்கு வந்தாலும் கொரோனா வைரஸ் இன்னும் முற்றிலும் போய்விடவில்லை என கூறினார். கொரோனாவுக்கான தடுப்பூசி வரும் வரை நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

கொரோனாவை வேரோடு வீழ்த்தும் வரை அதற்கெதிரான இந்தியர்களின் போராட்டம் முடிவடையாது எனவும், மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறினார். பொதுமக்கள் அலட்சிய போக்குடன் இருப்பதை காண முடிகிறது எனவும், முகக்கவசம் அணியாமல் மக்கள் வெளியே வருகிறார்கள் அதை முற்றிலுமாக தவிர்ப்பது தான் இந்த சூழலுக்கு ஏற்றது என எடுத்துரைத்தார். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகாமவும், பலி எண்ணிக்கை குறைவாக உள்ளது மகிழச்சி அளிக்கிறது என கூறினார். ஊரடங்கு முடியலாம், ஆனால் கொரோனாவின் தாக்கம் நீடிக்கும் என தெரிவித்தார். கொரோனா ஒழிப்பில் முழு வெற்றி அடையும் வரை மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.

தடுப்பூசி கிடைக்கும் வரை கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வலுவிழந்து விட கூடாது என பேசினார். கொரோனா கால ஊரடங்கு முடிந்து வீட்டை விட்டு வெளியே வரத் தொடங்கி உள்ளோம் என கூறினார். இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசிக்கு ஆராய்ச்சி நடந்து வருகிறது எனவும், நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் தடுப்பு மருத்து சென்றடைய இலக்கு என தெரிவித்தார். தடுப்பூசி வரும் வரை கொரோனாவிற்கு எதிராக போர் வலவிழந்து விடக்கூடாது என கூறினார்.

இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவரமாக உள்ளது என தெரிவித்தார். மகிழ்ச்சியை அளிக்கும் பண்டிகைகள் இம்முறை இக்கட்டான காலகட்டத்தில் வரவுள்ளன. பண்டிகைகளை கொண்டாடும் போது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என கூறினார். ஊடகங்கள் கொரோனா விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.


Tags : Modi ,speech ,country , People, remember, the virus is not completely extinct: Prime Minister Modi's speech to the people of the country for the 7th time...
× RELATED மோடி பேரணியில் பள்ளி மாணவர்கள்: கோவை...