×

நிலக்கோட்டை அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து: சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். நிலக்கோட்டை அருகே உள்ள மணியக்காரன்பட்டி என்ற ஊரின் அருகே மதுரை- தேனி சாலையில் சற்று முன்பு காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. தேனியில் இருந்து மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி அதிவேகமாக வந்துகொண்டிருந்ததாகவும், மதுரையில் இருந்து கொடைக்கானல் நோக்கி சென்ற இந்த கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரியின் மீது மோதியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே கார் நொறுங்கி காரில் பயணித்த ஒரு ஆன், சிறுவன் உள்பட ஒரு பெண் என காரில் வந்தவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் அதே காரில் பயணம் செய்த மேலும் ஒரு பெண் படுகாயங்களுடன் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலும் சம்பவ இடத்தில் நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன், மற்றும் காவல்துறையினர் விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் வந்த 4 பெரும் கொடைக்கானலை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


Tags : spot ,Nilakottai , Truck-car collides head-on near Nilakottai
× RELATED அசாமில் லாரி ஓட்டுனர்கள் மீது துப்பாக்கி சூடு: 5 பேர் பலி