மகாராஷ்டிராவில் நாளை முதல் புறநகர் ரயிலில் பெண்கள் பயணம் செய்ய அனுமதி: ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி..!!

மும்பை: மகாராஷ்டிராவில் நாளை முதல் புறநகர் ரயிலில் பெண்கள் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருக்கும் நிலையில் முன்களப்பணியாளர்கள், அத்தியாவசியப் பணியில் உள்ள அதிகாரிகள், ஊழியர்கள், அரசு ஊழியர்கள் அலுவலகத்துக்கு வர முடியாமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர்.

முன்னதாக மராட்டியத்தில் அத்தியாவசிய ஊழியர்களுக்காக புறநகர் ரயில் சேவையை மேற்கு ரயில்வே தொடங்கியது. அதில், காலை 5.30 மணி முதல், இரவு 11.30 மணி வரை 15 நிமிட இடைவெளிகளில் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதல்கட்டமாக சர்ச் கேட், விரார் வழித்தடங்களிலும், சில ரயில்கள் தகாணி ரோட் ரயில்நிலையம் வரையிலும் இயக்கப்படுகின்றன.

மேலும், அரசின் சிறப்பு பாஸ் இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கின்றனர். இந்த ரயில் சேவையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு ஒரு சீட்டில் ஒருவர் மட்டுமே அமர வேண்டும் என்றும் அனைவரும் முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த பேட்டியில் மகாராஷ்டிராவில் நாளை முதல் புறநகர் ரயிலில் பெண்கள் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசின் கோரிக்கையை ஏற்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும், இரவு 7 மணிக்கு பிறகும் பெண்கள் புறநகர் ரயிலில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: