×

நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு

சென்னை: டுவிட்டரில் நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. விஜய் சேதுபதி தன் மகளுடன் இருக்கும் படத்தைப் பதிவிட்டிருந்த ட்விட்டர் ஐடி ஒன்றில், அவரது மகளுக்குப் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கப்பட்டது. பலரும் அந்த ட்வீட்டுக்குக் கண்டனம், எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்தப் பக்கத்தை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. பலரும் அந்நபரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து 3 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.


Tags : Vijay Sethupathi ,Cyber crime police , Cyber crime police have registered a case against actor Vijay Sethupathi for threatening his daughter
× RELATED பேரறிவாளனை விடுதலை செய்ய விஜய் சேதுபதி வேடுகோள்