×

சென்னை-பெங்களூருக்கு நாளை முதல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை சென்ட்ரல்- பெங்களூரு இடையே இரண்டு அடுக்கு குளிரூட்டப்பட்ட அதிவேக சிறப்பு ரயில் (06075) நாளை முதல் தினமும் காலை 7.25 மணிக்கு புறப்பட்டு கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையத்தை பிற்பகல் 1.10 மணிக்கு சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதே போல, கேஎஸ்ஆர் பெங்களூரு-சென்னை சென்ட்ரல் இடையே அதிவேக சிறப்பு ரயில் (06076) நாளை முதல் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, பெரம்பூர், வழியாக அன்றிரவு 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும் எனவும் கூறியுள்ளது. மேலும் இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai ,Bangalore ,announcement ,Southern Railway , Chennai-Bangalore special train tomorrow, Southern Railway
× RELATED சென்னை - பெங்களூரு தொழில் வணிக வழி...