விவசாயிகளுக்காக ராஜினாமா செய்யவும் தயங்க மாட்டேன்... மத்திய அரசுக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் எச்சரிக்கை

* வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப்பில் தீர்மானம்

* 3 புதிய மசோதாக்களை தாக்கல் செய்தார் அமரீந்தர் சிங்

சண்டிகர்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேளாண் பொருட்களை சந்தைபடுத்துவது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகளும் எதிர்கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் ரயில் மறியல், டிராக்டர் பேரணி என விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதிய சட்டங்களை நிறைவேற்றுமாறு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை அக்கட்சி கேட்டுக்கொண்டது.

அதன்படி பஞ்சாப் மாநில சிறப்பு பேரவை கூட்டம் கூடியதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 3 புதிய மசோதாக்களை அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிமுகம் செய்தார். அதோடு மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பேரவையில் உரையாற்றிய அமரீந்தர் சிங் வேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசு நடந்து கொள்வது விசித்திரமாக இருப்பதாக கூறினார். மேலும் பஞ்சாப் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தலைவணங்குவதை விட பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருப்பதாகவும் அமரீந்தர் சிங் எச்சரித்தார்.

Related Stories: