×

கொரோனாவை குணப்படுத்தும் சித்தா மருந்து

விருதுநகர் :விருதுநகர் கலெக்டர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சித்த மருந்தான எம்.வி.கஷாயம் மூலம் சிகிச்சை அளிக்க அரசு அனுமதித்துள்ளது. எம்.வி.கஷாயம் கொரோனாவை குணப்படுத்தும் தன்மை உடையது என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எம்.வி.கஷாயம் வைரஸை மனித உடலில் வளர்ச்சி அடையாமல் தடுக்கும். காய்ச்சல், உடல்வலி, அலர்ஜி, சுவாச நோய்கள், அல்சர், வயிற்றுப்போக்கு, புற்றுநோயை குணப்படுத்தும். ஈரலை காக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

3 முதல் 6 நாட்கள் உட்கொண்டால் நோயில் இருந்து முழுமையாக விடுபடலாம். எம்.வி.கஷாயம் 3 முறை அருந்தினாலே நோய் பரவல் கட்டுப்பட்டு குறைய ஆரம்பிக்கும். காய்ச்சல், தலைவலி, உடல்வலி, தொண்டை வலி, இருமல் மற்றும் மூச்சுவிடுதல் சிரமம் 2 நாட்களில் குணமடையும். ரத்தம் உறைதல் தடுக்கப்பட்டு மூச்சுத்திணறல், மாரடைப்பு வராமல் தடுக்கும்.

Tags : Corona, healing, Siddha medicine
× RELATED ஹாமில்டனுக்கு கொரோனா