நூடுல்ஸ்

எப்படிச் செய்வது?

கொதிக்கும் தண்ணீரில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நூடுல்ஸை போட்டு நன்கு வேகவைத்து வடிகட்டவும். அப்பொழுது நூடுல்ஸ் ஒட்டாமல் இருக்கும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி தக்காளி ப்யூரி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும். பின்பு சிறு துண்டுகளாக நறுக்கிய காய்கள், உப்பு சேர்த்து வதக்கி சோயா சாஸ், வெந்த நூடுல்ஸ், மிளகுத்தூள் போட்டு கிளறி சூடாக பரிமாறவும். விரும்பினால் சீஸ் கொண்டு அலங்கரித்து பரிமாறலாம்.