டிடிவி.தினகரன் கண்டனம்: இடஒதுக்கீட்டில் தமிழக அரசு ஏமாற்றுகிறது

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசுப்பள்ளி மாணவர்களை பழனிசாமி அரசு மீண்டும் ஒருமுறை நம்பவைத்து ஏமாற்றுகிறதோ  என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. ஏற்கனவே நீட் தேர்வு சட்ட மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்ததை  மூடிமறைத்து ஏமாற்றிய இந்த ஆட்சியாளர்கள், ஏழை, எளிய மாணவர்களுக்கு அதேபோன்றதொரு துரோகத்தை இப்போதும் செய்வது கண்டிக்கத்தக்கது. ஆளுநர் ஒப்புதல் கொடுக்கும் வரை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறாது என்று கூறி பொறுப்பைத் தட்டி கழிக்கும் கையாலாகாத ஓர் அரசாங்கம்  தமிழ்நாட்டில் இருப்பது வேதனை அளிக்கிறது.

Related Stories:

>