மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: செப்டம்பர் 15ம் தேதி தமிழக அமைச்சரவை நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு சட்டம் இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால், இன்று வரை ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. எனவே, நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும், சட்டத்திற்கு விரோதமாகவும், தன்னிச்சையாகவும், தமிழக அரசை கலந்தாலோசிக்காமலும் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்திட வலியுறுத்தியும் இன்று காலை 10.30 மணிக்கு ஆளுநர் மாளிகை முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையேற்கிறார்.

Related Stories:

>