வேட்பாளர் தேர்வு குறித்து சமக ஆலோசனை

சென்னை: சமக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சமக மண்டல பொறுப்பாளர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர்களின் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் அனைத்து மண்டலங்களிலும் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் தேர்வு, நிர்வாகிகள் முழுமைப்படுத்துதல், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துதல், தமிழக அரசியல் சூழல் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதற்கான ஆய்வறிக்கை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>