×

வீட்டை உடைத்து பணம், நகை திருட்டு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை அடுத்த கீழ்படப்பை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (37), இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் மறைமலைநகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகளுடன், மனைவி வேலூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து இரவு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கபட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். இதில் பீரோவில் வைத்திருந்த 2 சவரன் தங்க நகை, ரூ 2.25 லட்சம் பணம் மற்றும் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கபட்ட பைக் ஆகியவற்றை திருடு சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சுரேஷ் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : house , Breaking into the house and stealing money, jewelry
× RELATED திகாலையில் வீட்டில் நுழைந்து டாக்டர்...