×

சில்லி பாயின்ட்...

* ஆஸி செல்லும் இந்திய அணி அடுத்த வாரம் அறிவிப்பு
ஐபிஎல் தொடர் முடிந்ததும் இந்திய அணி உடனடியாக ஆஸ்திரேலியா செல்கிறது. அங்கு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் என இரண்டரை மாத சுற்றுப்பயணத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய வீரர்களுக்கு 14நாட்கள் ஆஸ்திரேலியாவில் ‘தனிமைப்படுத்துதல்’ கட்டாயம். ஆனால் அங்கு ஒவ்வொரு மாநிலத்திலும் தனிமைப்படுத்தும் நாட்கள் வித்தியாசப்படுகின்றன. அதனால் ‘கிரிக்கெட் ஆஸ்திரேலியா(சிஏ)’ இன்னும் போட்டி அட்டவணையை உறுதி செய்யவில்லை. இந்நிலையில் யுஏஇயின் நடைபெறும் ஐபிஎல் 3வாரங்களில் முடிவை எட்ட உள்ளது. அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்ல உள்ள இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) அடுத்த வாரம் அறிவிக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


* அமித்துக்கு பதில் பிரவீன்
டெல்லி அணியின் சுழற் பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா(37). கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியின் போது நிதிஷ் ராணா அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்ற அமித் காயமடைந்தார். அதனால் ஐபிஎல் தொடரில் இருந்து அமித் விலகினார். சிகிச்சைக்காக இந்தியா திரும்பியுள்ளார். ஐபிஎல் தொடர்களில் இதுவரை 150 ஆட்டங்களில் விளையாடி உள்ள அமித் மிஸ்ரா 160 விக்கெட்களை வீழ்த்தி 2வது இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் உள்ள லசித் மலிங்கா 170 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் அமித்துக்கு பதில் டெல்லி அணியில் எஞ்சிய போட்டிகளுக்காக கர்நாடகாவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் துபே(27) சேர்க்கப்பட்டுள்ளார். அவர் 12 உள்நாட்டு டி20 போட்டிகளில் விளையாடி 16விக்கெட்களை எடுத்துள்ளார்.

* போலாந்து பறந்தார் சத்யன்
கொரோனா பீதி காரணமாக வீட்டுக்குள் முடங்கி கிடந்த வீரர்கள்  மீண்டும் களம் காண தொடங்கியுள்ளனர். பேட்மின்டன், ஸ்குவாஷ் வீரர்களை தொடர்ந்து டேபிள் டென்னிஸ் வீரர் டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன்(27) களம் காண உள்ளார். அதற்காக  உலகின் 32ம் நிலை வீரரான சத்யன், இப்போது போலாந்து சென்றுள்ளார். அங்கு வார்சா நகரில் நடைபெற உள்ள ‘போலிஷ் சூப்பர் லிகா’ டேபிள் டென்னிஸ் தொடரில் பங்கேற்க உள்ளார். இது குறித்து சத்யன்,‘அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு எத்தனை சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியும் என்று தெரியவில்லை. அதனால் இதுபோன்ற கிளப்களுக்கான போட்டிகளில் பங்கேற்பது பயிற்சி பெற உதவும்’ என்று கூறியுள்ளார்.

Tags : Roulette Point ...
× RELATED ஹெட் 62, அபிஷேக் 63, மார்க்ரம் 42*, கிளாஸன் 80*...