லாரியில் மாடுகளை திருட முயன்ற சட்டக்கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த மாடு மற்றும் கன்றுகுட்டி ஆகியவற்றை, நேற்று 2 பேர் ஒரு வேனில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது மாட்டின் உரிமையாளர் சென்று கேட்டபோது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த மக்கள் ஒன்றுகூடி, மாடுகளை திருடிய இருவரையும் பிடித்து சரமாரியாக தாக்கினர். இதையடுத்து பிடிபட்டவர்கள் அவர்களது நண்பர்களுக்கு செல்போன் தகவல் தெரிவித்தனர். அப்போது அவர்களது நண்பர்கள் 3 பேர், திருடர்களுக்கு ஆதரவாக வந்தனர். மாட்டின் உரிமையாளர்கள் பிடித்து வைத்திருந்த 5 பேரையும் குன்றத்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், குத்தம்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ்(30), படூர் மேடுபகுதியை சேர்ந்தவர் மோகன்(25).  டிரைவர்.  சதீஷ் சட்டப்படிப்பு 2ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.

திருமுடிவாக்கத்தில் உள்ள ஒரு கம்பெனியில் லோடு இறக்கிவிட்டு திரும்பி வந்தார். அப்போது, இருவரும் சேர்ந்து அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த மாடு மற்றும் கன்றுக்குட்டியை வண்டியில் ஏற்றிச்செல்ல முயன்றிருப்பது தெரியவந்தது. அப்போது மாட்டின் உரிமையாளர்கள் வந்து தாக்கியதால் அவர்களது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்துள்ளனர். இதையடுத்து 2 பேர் மீதும் குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சதீஷ் அழைத்ததன்பேரில் வந்த, அவர்களது நண்பர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இதுவரையில் இந்த பகுதியில் 50க்கும் மேற்பட்ட மாடுகள் காணாமல் போயிருப்பதாக மாட்டின் உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Related Stories: